Capital Metals Cricket Cup 2026 போட்டி மைதானம் மாற்றம்…!!

தவிர்க்க முடியாத காரணங்களால் Capital Metals Cricket Cup 2026 கிரிக்கெட் தொடரின் போட்டிகள் நடைபெறும் மைதானம் மாற்றப்பட்டுள்ளதாக போட்டி ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

இதன்படி, இந்த வார இறுதியில் நடைபெறவுள்ள போட்டிகள் மற்றும் தொடரின் இறுதிப் போட்டி ஆகிய அனைத்தும் #ஊரணி கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மைதானம் மாற்றப்பட்டுள்ளமை தொடர்பில் ஏற்பட்டுள்ள சிரமங்களுக்கு ஏற்பாட்டுக் குழு வருத்தம் தெரிவித்துள்ளதுடன், போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகள், வீரர்கள் மற்றும் ஆதரவாளர்களின் புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், போட்டியில் பங்கேற்கும் ஒரு அணிக்கான பதிவு கட்டணம் ரூ.3,000 என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடரின் வெற்றியாளருக்கு கிண்ணத்துடன் ரூ.#4இலட்சம் பணப்பரிசும், இரண்டாம் இடம் பெறும் அணிக்கு கிண்ணத்துடன்

#ரூ3இலட்சம் பணப்பரிசும் வழங்கப்படவுள்ளது.

அரை இறுதியில் தோல்வியடையும் இரு அணிகளுக்கும் தலா ரூ.1 இலட்சம் வழங்கப்படவுள்ளது.

மேலும், இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனுக்கு #கிண்ணத்துடன் ரூ.50,000, சிறந்த #துடுப்பாட்ட வீரருக்கு #கிண்ணத்துடன் ரூ.50,000, சிறந்த #பந்துவீச்சாளருக்கு #கிண்ணத்துடன் ரூ.50,000 மற்றும் தொடரின் #சிறந்தவீரருக்கு #கிண்ணத்துடன் ரூ.75,000 பணப்பரிசாக வழங்கப்படவுள்ளது.

போட்டிக்கான பதிவு மற்றும் மேலதிக தகவல்களுக்கு Ushanth – 075 767 3145, Rupan – 075 762 9798, Zawa – 077 564 1737 ஆகியோருடன் தொடர்புகொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *