பிரதேச சபை உறுப்பினர் கரிகாலனால் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் விசுவமடு வட்டாரத்தில் பிரதேச சபை உறுப்பினராக தெரிவான தமிழரசுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் வே. கரிகாலன் தனது வட்டாரத்தில் மிகவும் கஷ்டப்பட்ட பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் பாடசாலைக்கு நீண்ட தூரம் நடந்து செல்வதை இனம் கண்டு அவர்களுக்கு புலம்பெயர் அமைப்புக்கள் ஊடாக துவிச்சக்கர வண்டிகளை பெற்றுக்கொடுத்துள்ளார்.

இந்த மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி வண்டிகள் நேற்று(15) பிரதேசத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியா நாட்டினை தலமாகக் கொண்டு இயங்குகின்ற அன்பாலயம் அமைப்பின் ஊடாக வசந்தமலர் சுரேஸ்குமாருடைய ஞாபகார்த்தமாக விசுவமடு பிரதேசத்தில் 4 மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டது.

எனவே இதற்கான ஒழுங்கமைப்பு செய்துள்ள அன்பாலயத்தினுடைய ரமேஸ்க்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு குறிப்பாக 4மாணவர்களும் தூர இடங்களில் இருந்து பாடசாலைக்கு நடந்து செல்வதாக இனங்காணப்பட்டு அவர்களுக்கு முதல்கட்டமாகா 4 துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.

தொடர்ச்சியாக ஏனைய மாணவர்களுக்கும் துவிச்சக்கரவண்டிகள் வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *