மேஷம்: கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். கோபத்தையும் செலவுகளையும் கட்டுப்படுத்துங்கள்.
ரிஷபம்: தொழில் மற்றும் பயணங்களில் எச்சரிக்கை தேவை. உடல்நலத்திலும் உணவுப் பழக்கத்திலும் கவனம் செலுத்துங்கள்.
மிதுனம்: தாய்வழி உறவுகளால் நன்மை கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தேவையற்ற முதலீடுகளைத் தவிருங்கள்.
கடகம்: நண்பர்களால் சில இடையூறுகள் ஏற்படலாம். வேலைப்பளு அதிகரிக்கும். பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.
சிம்மம்: பிள்ளைகளின் சுபகாரியங்கள் கைகூடும். முதலீடுகளில் நிதானம் தேவை. வாகனப் பயணங்களில் எச்சரிக்கையாக இருங்கள்.
கன்னி: தொழில் வளர்ச்சிக்கும் வருமான அதிகரிப்புக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். பேச்சில் நிதானம் அவசியம்.
துலாம்: குடும்பத்தில் பணத் தேவைகள் அதிகரிக்கலாம். பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி வாய்ப்புகள் தேடி வரும்.
விருச்சிகம்: பூர்வீகச் சொத்துகளால் லாபம் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். பதவி உயர்வுக்கும் வாய்ப்புண்டு.
தனுசு: புதிய தொழில் தொடங்கவும் முதலீடு செய்யவும் சாதகமான நாள். துணிச்சலுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.
மகரம்: தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்ப உறவுகள் மகிழ்ச்சியாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களிடம் மதிப்புடன் நடந்து கொள்ளுங்கள்.
கும்பம்: குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். நினைத்த காரியங்கள் கைகூடும். வீண் செலவுகளையும் கோபத்தையும் தவிருங்கள்.
மீனம்: வேலைப்பளு குறையும். வெளிநாட்டு வேலை எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். செலவுகளைத் திட்டமிட்டு செய்யுங்கள்

