திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலய கந்தசஷ்டி விரதோற்சவம் 10ஆம் திகதி ஆரம்பம்!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த கந்தசஷ்டி விரதோற்சவம் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

இதனை முன்னிட்டு ஆலயத்தில் ஆறு நாட்கள் விசேட பூஜை வழிபாடுகள் மற்றும் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன.

நவம்பர் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சூரசம்ஹாரத் திருவிழாவும், நவம்பர் 16ஆம் திகதி திங்கட்கிழமை தெய்வானை திருக்கல்யாண வைபவமும் சிறப்பாக இடம்பெறவுள்ளன.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் மற்றும் ஆலய குரு சிவஸ்ரீ நீ. அங்குசநாதக் குருக்கள் ஆகியோரின் தலைமையில் பூஜை வழிபாடுகள் நடைபெறவுள்ளன.

மேலும், நவம்பர் 14ஆம் திகதி இரவு 9.14 மணிக்கு ஷஷ்டி திதி ஆரம்பமாகி, நவம்பர் 15ஆம் திகதி இரவு 9.35 மணிக்கு நிறைவடையவுள்ளதால், விரதம் அனுஷ்டிக்கும் அடியார்கள் நவம்பர் 16ஆம் திகதி விரதத்தை நிறைவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடாந்த உற்சவத்தில் கலந்துகொண்டு விரதம் அனுஷ்டித்து இறையருள் பெற்றுச் செல்லுமாறு ஆலய பரிபாலன சபையினர் அடியார்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *