வெல்லாவெளியில் பயனாளிகளிடம் வீடுகள் கையளிப்பு!

போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்ட “உங்களுக்கு வீடு – நாட்டுக்கு எதிர்காலம்” திட்டத்தின் கீழ், 23 பயனாளிகளுக்கு நிறைவு செய்யப்பட்ட வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன.

கடந்த 10.11.2026 அன்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது, 23 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், கிராம உத்தியோகத்தர்கள், கள உத்தியோகத்தர்கள், பிரஜா சக்தி உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *