அனிருத் – காவ்யா மாறன் திருமணம்: செலவு ரூ.100 கோடியாம்!

அனிருத், காவ்யா மாறனின் திருமணத்தை பார்க்க சிம்பிளாக இருந்தபோதிலும் அதற்காக ரூ. 100 கோடி செலவு செய்திருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகி கேட்பவர்களை வியக்க வைத்திருக்கிறது.

அனிருத்துக்கும், அவரின் காதலியான காவ்யா மாறனுக்கும் நவம்பர் 11ம் திகதி கிரீஸில் சிறப்பான முறையில் திருமணம் நடைபெற்றது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு செயினை அனிருத் கையில் கொடுக்க அதை காவ்யா கழுத்தில் அணிவித்தார் அனிருத். அதே போன்று காவ்யா மாறனிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொடுத்த சங்கிலியை அவர் அனிருத்துக்கு அணிவித்தார்.

சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார் ஸ்டாலின். இந்நிலையில் அந்த திருமணத்திற்கான செலவு ரூ. 100 கோடி மட்டுமே என்று டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்திருக்கிறது.

சென்னையில் இருந்து நான்கு குடும்பத்தார் செல்ல தனி விமான ஏற்பாடு செய்தது, கிரீஸில் இருக்கும் ஃபோர் சீசன்ஸ் அஸ்டர் பாலஸ் ஹோட்டலில் திருமணம் நடந்தது, விருந்தினர் தங்கும் செலவு என அனைத்தையும் சேர்த்தால் ரூ. 100 கோடி செலவாகியிருக்கிறது என்கிறது டைம்ஸ் ஆப் இந்தியா.

வரும் 21ம் திகதி சென்னையில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் நடக்கவிருக்கும் வரவேற்பு நிகழ்ச்சிக்கான செலவையும் சேர்த்தால் ரூ. 150 கோடியை தொடும் என அது மேலும் தெரிவித்துள்ளது.

இருந்தாலும் காவ்யா மாறன் திருமணத்திற்கு ரூ. 100 கோடி செலவானது என இரு வீட்டாரும் உறுதி செய்யவில்லை.கலாநிதி மாறனிடம் ரூ. 24 ஆயிரத்து 600 கோடி சொத்துக்கள் இருக்கும்போது மகளின் திருமணத்திற்கு ரூ. 100 கோடி செலவு செய்திருந்தாலும் அது பெரிய விஷயம் இல்லை.

திருமண புகைப்படங்களை பார்த்தபோது இது ஒரு வேளை சுயமரியாதை திருமணமாக இருக்குமோ என்கிற சந்தேகம் சினிமா ரசிகர்களுக்கு ஏற்பட்டது.

ஆனால் சந்தேகமே வேண்டாம் அது சுயமரியாதை திருமணம் தான் திமுகவை சேர்ந்த டி.ஆர்.பி. ராஜா எக்ஸ் தளத்தில் உறுதி செய்தார்.

இதையடுத்து பிராமணரான அனிருத் ரவிச்சந்தர் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டிருக்கிறாரே. வைதீக முறைப்படி அல்லவா நடக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆச்சரியப்பட வைத்துவிட்டார்கள் என்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *