காட்டு யானைத் தாக்கம்: 61 பேருக்கு இழப்பீடு!

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டு யானைகளின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் நஷ்டஈட்டுக் காசோலைகளை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு அவர்கள் வழங்கி வைத்தார்.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் எஸ். ரங்கநாதன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதற்கட்டமாகத் தெரிவு செய்யப்பட்ட 61 பயனாளிகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு காசோலைகளை வழங்கி வைத்தார்.

கடந்த ஆண்டு மற்றும் இவ்வாண்டு காட்டு யானைகளின் தாக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள், வீடுகள், சொத்துக்கள் மற்றும் அரச பொதுச் சொத்துக்களுக்கான சேதங்களுக்கு 37 மில்லியன் ரூபாயும், விவசாய நடவடிக்கைகளில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு 21 மில்லியன் ரூபாயும் என மொத்தம் 58 மில்லியன் ரூபாய் பெறுமதியான நஷ்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர் எஸ். சுதாகரன், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *