யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி அகழ்வு தொடர்பில் பேராசிரியர் ராஜ் சோமதேவ சமர்ப்பித்த அறிக்கை உண்மைக்குப் புறம்பானது எனக் குற்றஞ்சாட்டி, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து செம்மணியில் இன்று (17) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
செம்மணி புதைகுழியில் இடம்பெற்றது மனிதப் படுகொலையே என்பதை வலியுறுத்தியும், குறித்த அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
- இதன்போது, குறித்த அறிக்கையின் பிரதியும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டு எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

