தேர்தல் முறைப்பாடுகளை பொலிசார் முகாமைத்துவம் செய்வது மற்றும் தேர்தல் கடமைகளின் போது பொலிசாரின் வகிபாகம் தொடர்பாக வடமாகாணத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான கலந்துரையாடல் கிளிநொச்சியிலுள்ள தனியார் விடுதியில் இன்று பிற்பகல் நடைபெற்றது.
தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தலைமையில் நடைபெற்றது
பொலிஸ் திணைக்களத்தின் சட்ட பிரிவுக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர,கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண உதவித்தேர்தல் ஆணையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குறித்த கலந்துரையாடலில் பிரதிப்பொலிஸ்மா அதிபர் Zoom ஊடாக இணைந்து கொண்டார்


