தமிழரசுக் கட்சியின் பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இன்று(18) வாழைச்சேனை பேத்தாழை பஸ்தரிப்பிடத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பஸ் தரிப்பிடத்தில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காக விசேட பூசை நடைபெற்று பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
இன, மத பேதமின்றி வீதியால் சென்ற பொதுமக்கள் அதனை அருந்தியிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.
இந் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் கலந்து கொண்டு நினைவுப் பேருரையாற்றி இருந்தார்.
இதில் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


