வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து நடாத்தும் சித்திரை புத்தாண்டு விற்பனைச் சந்தை இன்று (07.04.2025) திங்கட்கிழமை பிரதேச செயலகம் முன்பாக ஆரம்பமாகியுள்ளது.
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு.பொ.சுரேஸ்குமார் தலைமையில் காலை 09.00க்கு நிகழ்வு ஆரம்பமாகியுள்ளதுடன் மாலை 04.00 வரை இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி கலந்து கொண்டு சித்திரை புத்தாண்டு விற்பனை சந்தையை நாடாவெட்டி திறந்துவைத்தார்.
விற்பனை சந்தையில் வடமராட்சி கிழக்கு பிரதேச உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்ததுடன் மக்கள் சமூக ஆர்வலர்கள் உள்ளூர் உற்பத்தியாளர்களின் பாெருட்களை உற்சாகத்துடன் கொள்வனவு செய்திருந்தனர்.
உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்தியை பார்வையிட்ட வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் உள்ளூர் உற்பத்தியாளர்களின் தேவைகளை கேட்டறிந்ததுடன் அவர்களிடம் இருந்து பொருட்களையும் கொள்வனவு செய்தார்.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,கிராம அலுவலர்கள்,சமுர்த்திச் சங்கம்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

