அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்

தியாக தீபம் அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதனை நினைவு கூறும் முகமாக  மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக நடைபெற்ற வருகிறது.

அதன் ஒரு நிகழ்வாக வாகரை பிரதேசத்தில் நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை(15) நேற்று புதன் கிழமை (16) ஆகிய இரண்டு நாட்கள் கண்டலடி வாகரை பொது விளையாட்டு மைதானத்தில் மட்டக்களப்பு தாயக செயணியினரால் விளையாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது அன்னையின் உருவப் படத்திற்கு மலர் வணக்கம்,அக வணக்கம் செய்யப்பட்டும் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் யாவும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் மரதன் ஒட்டம்,சைக்கிள் ஓட்டம்,கயிறு இழுத்தல்,உதைபந்தாட்டம்,பெண்களுக்கான எல்லை விளையாட்டு,என பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.இவ் போட்டி நிகழ்சிகளில் இளைஞர் யுவதிகள் ஆர்வத்துடன் பங்குபற்றினார்கள்.

போட்டி நிகழ்சிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற விளையாட்டு அணிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு பெறுமதி வாய்ந்த பரிசுப் பொருட்கள்,வெற்றிக் கேடயங்கள்,வெற்றிப் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு தாயகசெயலணி இணைப்பாளர் இ.செல்வகுமார்,வாகரை பிரதேச தாயக செயலணி ஒருங்கிணைப்பாளர் யு.புவனேஸ்வரன் மற்றும் அன்னை பூபதியின் பேரன் யோ.அரவிந்தன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இதே வேளை 19.04.2025 அன்று அன்னை பூபதியின் நினைவு தினத்தை முன்னிட்டு அதனை நினைவு கூறும் முகமாக பல்வேறு நிகழ்வுகள் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்னை பூபதி 2 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அகிழ்சை வழியில் தமது போராட்டத்தினை கடந்த 19.03.19 அன்று மட்டக்களப்பு மாமாங்க ஈஸ்வரர் ஆலயத்தில் குருந்தை மரத்தடியில் உண்ணா விரதத்தை ஆரம்பித்தார்.

தாம் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் அதே மாதம் 31 ஆம் திகதியன்று அவர் உயிர் நீத்தார்.அதனை நினைவு கூறும் முகமாகவே தாயகச் செயலணியினால் இவ் நிகழ்வுகள் மாவட்டம் தோறும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *