வாழைச்சேனை மெதடிஸ்த ஆலயத்தில் உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள்

உயிர்த்த ஞாயிறு வழிபாடு இன்று (20) காலை வாழைச்சேனை மெதடிஸ்த ஆலயத்தில் முகாமைக் குரு அருட் கலாநிதி  கே.எஸ்.நிசாந்தன் தலைமையில் நடைபெற்றது. பொலிசாரின் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வழிபாடு நிகழ்வுகள் நடைபெற்றன.
இன்று நாட்டின் அமைதிக்கான மன்றாடல் ஏர் எடுக்கப்பட்டது. கடவுள் உயிர்த்தெழுதல் ஊடாக உலகத்திற்கு அமைதியை ஏற்படுத்தி இருக்கிறார். அமைதி என்பது சகோதரத்துவத்துடன் வாழ்வதன் ஊடாக அனைவரிடமும் காணப்படுகின்ற பிரிவினை வேறுபாடுகளை அகற்றி வழிவகை செய்கிறது. அமைதி பெறும் மனுக்குலம் சார்ந்தது மட்டுமல்ல இயற்கையும் சார்ந்தது என்பதை புரிந்து கொள்ளவேண்டும். உயிர்தெழுந்த திருநாள் அமைதி, சகோதரத்துவம் பண்பு, இயற்கை வளங்களை பொறுப்புள்ளவர்களாக பாவிக்க வழிவகை செய்து ஆண்டவரின் நிறைவான அருள் உங்களோடு இருப்பதாக என தமது இறைச் செய்தியில் தெரிவித்து இன்றைய வழிபாட்டு நிகழ்வினை வழி நடத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *