தேர்தல் கடமைகளில் ஈடுபடும் போது கடைப்பிடிக்க வேண்டிய விடையங்கள் தொடர்பாகவும், தேர்தல்கள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட திட்டங்கள் தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், திருமதி நவரூபரஞ்ஜினி முகுந்தன் (காணி), பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர்கள் என பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கடமைக்காக இம்முறை 457 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்கப்படவுள்ளதுடன் 144 வாக்கெண்ணும் நிலையங்களாக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.