பாப்பரசரின் மறைவுக்குப் செம்பியன் பற்று வடக்கிலும் துக்க நாள் அனுஸ்டிப்பு

பரிசுத்த பாப்பரசரின் மறைவுக்கு யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் துக்கநாள் அனுஸ்டித்து வருகின்றனர் செம்பியன் பற்று வடக்கு வரலாற்று சிறப்புமிக்க புனித பிலிப்பு நேரியார் ஆலய பங்கு மக்கள் தமது திருத்தந்தையின் இழப்பின் கவலையினை வெளிப்படுத்தும் முகமாக ஆலய வாசலில் கறுப்பு கொடி கட்டி மற்றும் ஆலய முன்றலில் பாப்பரசரின் இழப்புக்கான பதாகைகள் கட்டி தமது துர்கத்தினை வெளிப்படுத்தி உள்ளனர்.

இது சம்பந்தமாக ஆலய பங்கு மக்களை கேள்வி கேட்ட போது மக்கள் கத்தோலிக்கத் திருச்சபையின் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளாரின் மறைவு, உலகவாழ் மக்கள் ஒவ்வொருவரையும் ஆழ்ந்த கவலைக்கு உள்ளாக்கியிருக்கிறது.

எனவும் இவ் இழப்பினை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் தாங்கள் இப்போது ‘ஆயன் இல்லா ஆடுகளை போல ‘உள்ளதாகவும் அடுத்த பாப்பரசரின் தெரிவினை மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறோம் எனவும் தமது கவலையினை தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *