நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரிப்பு

நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாகவும் அந்த வகையில் இந்த வருடத்தில் இதுவரை 8,66,596 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

 

அதன்படி, இம் மாதம் ஏப்ரல் மாதத்தின் முதல் 24 நாட்களில் மாத்திரம் நாட்டுக்கு 144,320 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் அவ்வாறு வருகை தந்துள்ள ஐந்து பேரில் ஒருவர் இந்திய சுற்றுலாப் பயணி எனவும் அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.

 

அதன்படி, ஏப்ரல் மாதத்தில் வருகை தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் 29,763 பேர் இந்தியர்கள் எனவும் இது மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 20.6 வீதம் எனவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *