தொலைபேசி ஊடாக பணப்பரிமாற்றம் செய்து கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை விற்பனை செய்த மலையக இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து அட்டன் வழியாக பண்டாரவளை வரை தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொண்டு போதைப்பொருட்களை சூட்சமமாக பாதைகளில் மறைத்து வைத்துவிட்டு பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்ட வெளிமடை பகுதியை சேர்ந்த 25 மற்றும் 27 வயதுக்கு உட்பட்ட கொழும்பு மருதானையில் முச்சக்கர வண்டி செலுத்தும் இரண்டு இளைஞர்களே நேற்று(13) வட்டவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுனர்.

