சிங்கள தமிழ் சித்திரைப்புத்தாண்டு பாரம்பரிய பண்பாட்டு கலாசார விளையாட்டு நிகழ்வுகள் மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய வளாகத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு பிரதி பொலிஸ்மா அதிபர் நுவான் மென்டிஸ் தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில்
மட்டக்களப்பு மாவட்ட 13 பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கிடையில் இடம்பெற்ற சிங்கள தமிழ் சித்திரைப்புத்தாண்டு பாரம்பரிய பண்பாட்டு கலாசார விளையாட்டு மற்றும் வினோத நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன், கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் வருன ஜயசுந்தர, மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி எம். பி. எம். சுபியான், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்ணம், மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ். எஸ். பி . லலித் லீலா ரத்ன மற்றும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மற்றும் ஏராவூர் நீதிமன்ற நீதிபதி ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.


