கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று(01) பிற்பகல் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

50 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள், மடிக்கணினிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை சட்டவிரோதமாகக் கொண்டு வந்து, தீர்வை வரி செலுத்தாமல் வெளியேற முயற்சித்த பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான பெண் மத்தேகொட பகுதியில் வசிக்கும் 63 வயதுடைய வர்த்தகர் என தெரியவந்துள்ளது.

அவர் நேற்று காலை 07.30 மணிக்கு டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் யுஎல்-226 மூலம் வந்தடைந்தார்.

சந்தேக நபர் கொண்டு வந்த பைகளில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 23 தங்க சங்கிலிகள், ஒரு தங்கக் கட்டி, 03 வளையல்கள், ஒரு ஜோடி காதணிகள், கைச்செயின்கள், 06 மடிக்கணினிகள் மற்றும் 11 கையடக்க தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு பிரதேச புலனாய்வுப் பிரிவிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டது.

சந்தேக நபரான பெண் சட்டவிரோதமாக கொண்டு வந்த பொருட்களும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *