மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் சிரமதானம்

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ், சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தோட்ட வளாகத்தில் சிரமதான நிகழ்வு இன்று(03) காலை 06.00 மணி முதல் மேற்கொள்ளப்பட்டது.
இச்சிரமதான நிகழ்வானது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின்  தோட்டப் பராமரிப்புக் குழுத் தலைவரும் உதவிச் செயலாளருமான எஸார் மீராசாஹிபினின் ஒருங்கிணைப்பில் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில், அதன் தலைவர் டொக்டர் எம். எச். சனூஸ் காரியப்பர் தலைமையில் இடம்பெற்றது.
இச்சிரமதான நிகழ்வில் நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் பொறியியலாளர் எம். எம். முஹம்மட் முனாஸ், பொருளாளர் தொழிலதிபர் ஏ. எல். எம். முஸ்தபா, பிரதித் தலைவர் தொழிலதிபர் எம். எம். எம். முபாரக், உதவித் தலைவர் மௌலவி எம். எம். எம். சலீம் (ஷர்க்கி), உதவிச் செயலாளர் ஏ. பர்ஹாம், உதவிப் பொருளாளர் ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் எம். நஜீம், நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், தோட்ட பராமரிப்புக் குழுவின் முன்னணி செயற்பாட்டாளர்களான ஏ. ஜெஸ்மீர், எம்.  ஐ. நஜீம், தோட்டப் பராமரிப்பு குழு உறுப்பினர்கள் மஹல்லாவாசிகள், ஜமாஅத்தினர், பிரதேச பொது அமைப்புகள் மற்றும் சங்கங்களின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *