நாளை(06) நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் முழங்காவில் வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்லும் முதலாவது பேரூந்து இன்று(05) காலை 08.30 மணிக்கு புறப்பட்டுச்சென்றது.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு. எஸ். முரளிதரன் மற்றும் உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. வே. சிவராசாவும் இணைந்து அனுப்பி வைத்தனர்.
தொடர்ச்சியாக ஏனைய வாக்களிப்பு நிலையங்களுக்கான பேரூந்துகளை அனுப்பும் பணிகளும் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


