கற்றல் வளங்களை முழுமையாகப் பயன்படுத்த பல்கலைக்கழக விதிமுறைகளை மதிக்க வேண்டும்

உபவேந்தர் பேராசிரியர் எஸ்எம் ஜுனைதீன் இந்த பிஐசிரி வெளிப்புற பட்டப்படிப்பு தொழில்நுட்ப பீடத்திற்கு ஒரு புதிய கல்வி அத்தியாயமாகவும் சிஈடிபிஎல்-க்கு ஒரு வலுவான அங்கீகாரமாகவும் நாட்டின் தொழில்நுட்ப மனித வள வளர்ச்சிக்கான ஒரு முக்கிய பங்களிப்பாகவும் அமைந்துள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் ஜுனைதீன் தெரிவித்தார்.

 

இந்த பட்டப்படிப்பு மூலம் திறமைமிக்க, ஒழுக்கமுள்ள மற்றும் முன்னோக்கிய சிந்தனையுடன் கூடிய ஐசிரி நிபுணர்கள் உருவாகி, நாட்டின் அபிவிருத்திக்கு சேவை செய்வார்கள் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

நிகழ்த்தினார்.

 

அவர் தனது உரையில், தொழில்நுட்பக் கல்வியின் எதிர்காலம், தகவல் தொடர்பாடல் துறையின் வளர்ச்சி மற்றும் மாணவர்கள் நாட்டின் அபிவிருத்தியில் வகிக்க வேண்டிய பங்கு குறித்து விரிவாக விளக்கினார்.

 

இதனைத் தொடர்ந்து, 2023/2024 கல்வியாண்டுக்கான பிஐசிரி பட்டப்படிப்பு மாணவர்களுக்கான இளங்களைக்கையேடு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

 

இந்த கையேடு, கல்வி விதிமுறைகள், பாடத்திட்ட அமைப்பு மற்றும் மாணவர் ஒழுங்குகள் தொடர்பான முக்கிய தகவல்களை உள்ளடக்கியதாகும்.

நிகழ்வின் இறுதியில், பிசிஐரி பட்டப்படிப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் கலாநிதி ஐ.எம். காலித் நன்றியுரையை நிகழ்த்தி, நிகழ்வை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.

 

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற திசைகாட்டல் அமர்வுகளில், பிஐசிரி பாடநெறி அமைப்பு, பரீட்சை நடைமுறைகள், கற்றல் வளங்கள், செயலமர்வுகள் நடத்தும் முறை, கற்றல் மேலாண்மை அமைப்பு பயன்பாடு மற்றும் நிர்வாகச் செயல்முறைகள் குறித்து சம்பந்தப்பட்ட பொறுப்பதிகாரிகள் விரிவான விளக்கங்களை வழங்கினர்.

 

இவ்வமர்வுகள் மாணவர்களுக்கு கல்வி மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்த தெளிவான வழிகாட்டுதலை வழங்கியதாக அமைந்தது.

 

நிகழ்வின்போது முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா, பிரதிப்பணிப்பாளர் பதிவு மற்றும் பரீட்சைகள் (பரீட்சை நடைமுறைகள்) கலாநிதி எம். ஐ. எப். கரீமா,

பிரதிப்பணிப்பாளர் – கற்றல் மற்றும் வளங்கள் (கற்றல் வளங்கள்) கலாநிதி சரீனா யு. எம். ஏ. ஜி., பிரதிப்பணிப்பாளர் – பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (கருத்தரங்குகள் நடத்தல்) கலாநிதி எம். ஐ. எம். றியாத், எல்எம்எஸ் ஒருங்கிணைப்பாளர் – சிஈடிபிஎல் (எல்எம்எஸ் அறிமுகம்) ஏ. ஜே. எம். ஹாஸ்மி, சிரேஷ்ட உதவி பதிவாளர் (எஸ்ஏஆர்) – சிஈடிபிஎல் எம். எச். நபார்

(நிர்வாக நடைமுறைகள்) ஆகியோர்களுடன் புதிய மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் பங்கு கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *