ஜனநாயகன் படத்தின் ரிலீஸின் சிக்கல் நீடிப்பு; விஜய் ரசிகர்கள் அதிருப்தி

ஜனவரி 9ஆம் திகதி ஜனநாயகன் படம் வெளிவரவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் சென்சார் சான்றிதழ் கிடைக்காததாலும், இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாலும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதி அமர்வு, படத்திற்கு உடனடியாக சென்சார் வழங்கவேண்டும் என உத்தரவிட்டநிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் சென்சார் போர்டு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனால் மீண்டும் ரிலீஸ் தள்ளிப்போனது.

இந்த வழக்கில் விசாரணை நடந்து முடிந்த நிலையில், இன்று(27) உத்தரவு என கூறியிருந்தனர். அதன்படி, வெளிவந்துள்ள உத்தரவில், ஜனநாயகன் படத்திற்கு உடனடியாக சென்சார் வழங்க வேண்டும் என்கிற தனி நீதிபதியின் உத்தரவை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்வதற்காக அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஜனநாயகன் திரைப்படத்தை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஜனநாயகன் படத்தின் ரிலீஸின் சிக்கல் நீடிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *