கா.பொ.த சாதாரண பரீட்சை இன்று(17) ஆரம்பமாகிய நிலையில் மன்னார் மாவட்டத்தில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் காலை ஆர்வத்துடன் பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளித்துள்ளனர்.
மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் உள்ள மாணவர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளித்துள்ளனர்.
இன்று காலை 8.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகியுள்ள நிலையில் மாணவர்கள் நேரத்துடன் பரீட்சை வழிகாட்டுதல்களுக்கு அமைவாக பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் சுமர் 32 பரீட்சை மையங்களில் 3,224 பரீட்சாத்திகள் கபொத சாதாரண பரீட்சைக்கு தோற்றினர்.

