யாழ்ப்பாணம் – ஏழாலை பகுதியில் மர அரிவு இயந்திரத்தினுள் சிக்கி குடும்பஸ்தர் நேற்று(07) உயிரிழந்துள்ளார்.
ஏழாலை பகுதியை சேர்ந்த 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் தனது வீட்டில் மர அரிவு நிலையத்தை நடாத்தி வந்துள்ள நிலையில், நேற்று வழமை போன்று மர அரிவு வேலையில் ஈடுபட்டிருந்த போது தவறி இயந்திரத்தின் மேல் விழுந்ததில் இயந்திரம் வெட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.