கரைச்சி பிரதேச சபை எகமனதாக பயங்கரவாததடைச்சட்டத்தை நிராகரித்தது – வேழமாலிகிதன்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேலமாளிதரன் நேற்று(19) ஊடக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டு இருந்தார்.

 

குறித்த ஊடக சந்திப்பு வாயிலாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

 

கரைச்சி பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று முன்தினம்(18) நடைபெற்றது.

 

இதன்போது பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பாக பெரும் விவாதம் பல மணி நேரம் நடைபெற்றது.

 

குறித்த விவாதத்தின் கடந்த 1979 ஆம் ஆண்டிலிருந்து பயங்கரவாத தடைச் சட்டமானது பல்வேறு வகையில் தமிழ் மக்கள் மீது இலங்கை தீவிலே சிறுபான்மை இனமான தமிழ்மக்களை அடிமைப்படுத்தி ஆட்கொண்டிருக்கின்றது தற்போதைய  நாட்டினுடைய ஜனாதிபதி ஆட்சிக்கு வரும்போது கூறினார்.

 

பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதாகவும் தெரிவித்திருந்தார். தற்பொழுது கூறுகிறார். பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக புதிய பயங்கரவாத தடைச் சட்டம் ஒன்றை அரசாங்கம் தற்பொழுது அறிவித்திருக்கிறது.

 

குறித்த விடயம் தொடர்பாக குறித்த சபை அமர்வில் பல மணி நேரம் விவாதம் நடைபெற்றது.

 

குறித்த விவாதத்தின் போது தமிழ் மக்களுக்கு பயன்தரக்கூடிய வகையில் அமையாது என்ற வகையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நிராகரிப்பதாக ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.

 

இதன்போது சபை அமர்வில் கலந்து கொண்ட 37 பேரில் 36 பேர்கள் ஏகமனதாக தமது பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பினை தெரிவித்து இருந்தனர்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளில் கட்டாக்காலி கால்நடைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுவதாகவும் வீதிகளில் மற்றும் பொது இடங்களில் மக்களுக்கு பல அசௌகரியங்களை ஏற்படுத்தக் கூடிய வகையிலும் வீதி விபத்துக்களை ஏற்படுத்தி வருவதாகவும் பொலிஸாரால் கரைச்சு பிரதேச சபையினருக்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருவதன் காரணமாக குறித்த விடயம் தொடர்பாக எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் கால்நடை உரிமையாளர்கள் தமது கால்நடைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

 

கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படுகின்ற பல்வேறு வர்த்தக சந்தைகளில் கந்துவட்டி என்னும் பெயரில் நாளாந்தம்  சந்தைகளில் காலை பெருந்தொகை பணத்தை வியாபாரிகளுக்கு வழங்கி மாலை அதிக வட்டி அரைபடப்படுவதாக பிரதேச சபையினருக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக முன்னாள் போராளி ஒருவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

குறித்த விடயம் தொடர்பாக பிரதேச சபையினர் தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இதற்கு அமைவாக வட்டி பணம் கொடுப்பவர்கள் மற்றும் சீட்டு பிடிப்பவர்கள் பிரதேச சபையின் அனுமதியை பெற்றிருப்பது அவசியமாகும்.

 

குறித்த விடயம் தொடர்பாக அனுமதியின்றி சீட்டு பிடிப்பவர்கள் மற்றும் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் தொடர்பாக பிரதேச சபையினருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுமாயின் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *