யாழ் கலிகைச் சந்தியில் வைத்து 2007ஆம் ஆண்டு 02ஆம் மாதம் 15ஆம் திகதி அன்று சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் இராமச்சந்திரன் ஈபிடிபியினருடன் இணைந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துக்கு நீதி கோரி இன்று(21) வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் யாழ் பருத்தித்துறையில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சிரேஷ்ட ஊடகவியலாளர் மதிவாணன் கைகளும், கால்களும் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு, இரத்தக் கறை படிந்திருப்பது போன்ற ஆடை அமைப்புடனான நீதி கோரிய காட்சி காண்பவர்கள் அனைவரையும் கண் கலங்க வைத்தது.
இதன்போது கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்காகவும் குரல் எழுப்பப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

