யாழ் பல்கலைக்கழகத்தில் பார்வைத்திறனற்ற மாணவர்கள் சாதனை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பட்டமளிப்பு விழாவில், வாழ்வகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் சாதனை படைத்துள்ளனர்.
மூன்றாம் நாளான நேற்று(21) நடைபெற்ற ஒன்பதாம் அமர்வில், வாழ்வக மாணவர்களான துரைராசா அருண்குமார் மற்றும் சிவபாதசுந்தரம் அனந்தினி ஆகியோர் பொதுக் கலைமாணிப் பட்டங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இவர்களுள் துரைராசா அருண்குமார், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்று, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 3ஏ, 3பி, 2சி, 1எஸ் பெறுபேறுகளைப் பெற்றதோடு, க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் 3ஏ சித்திபெற்றுப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பார்வைத்திறனற்ற இந்த இரு மாணவர்களும், தமது வாழ்வில் எதிர்கொண்ட பல்வேறு சவால்களுக்கும் இடர்பாடுகளுக்கும் மத்தியில் தமது பட்டங்களைப் பெற்றுக்கொண்டமை அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *