விமானப்படையின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரணைமடு விமானப்படையினரின் ஏற்பாட்டில் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.
ஏ9 வீதி கொக்காவில் பகுதியில் வீதியின் இருமருங்கிலும் காணப்பட்ட பிளாஸ்டிக்கழிவுகள் அகற்றப்பட்டன.
குறித்த சிரமதானப்பணியில் இரணைமடு விமானப்படை கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் ஜெயரத்ன அமரசிங்க மற்றும் கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் அழகக்கோன் ஆகியோர் கலந்து கொண்டனர்

