யாழ்ப்பாணத்தில் பௌர்ணமி தினத்தில் மதுபான சாலையில் இரகசியமாக மது விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருதங்கேணி பகுதியில் உள்ள மதுபான சாலையில் பௌர்ணமி தினமான திங்கட்கிழமை இரகசியமான முறையில் மதுபானம் விற்கப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து ஒரு தொகை மதுபானங்களை பொலிஸார் மீட்டனர்.

