இரணைமடுக்குளம் முழுமையான நீர்க்கொள்ளவை அடைந்து காணப்படுகின்ற நிலையில் இம்முறை 100வீத சிறுபோக நெற்ச்செய்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
இந் நிலையில் சிறுபோக கழிவு நீரைப்பயன்படுத்தி 1375ஏக்கரில் நெற்ச்செய்கை மேற்கொள்வதற்கு இன்று(04) மாவட்ட அரசாங்கதிபர் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் கிளிநொச்சி கிழக்கு நீர்ப்பாசன பொறியியலாளர் பிரகாஸ், கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர் மற்றும் கழிவு நீரைப்பயன்படுத்தி சிறுபோக நெற்ச்செய்கை மேற்கொள்ளவுள்ள கமக்காரர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

