ஏப்ரல் 09ம் திகதி அனுராதபுரம் ஜயசிறி மகா போதியில் நடைபெறவுள்ள தேசிய புத்தரிசி விழாவுக்கான புத்தரிசி வழங்கும் கிளிநொச்சி மாவட்டத்திற்கான நிகழ்வானது இராமநாதபுரம் கமநல சேவை நிலையத்தில் கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் சுதர்ஸ்மன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் தேவரதன் கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள நிர்வாக உத்தியோகத்தர் கவிதா கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் கமக்கார அமைப்புக்கள் சார்ந்தோர், திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

