சந்தையில் உப்பு பற்றாக்குறை நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்தார்.
எதிர்காலத்தில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் உப்பின் கையிருப்பு அதிகரிக்கப்படுவதால் உப்பு பற்றாக்குறை கட்டுப்படுத்தப்படும் என்றும் அவர் கூறுகிறார்.
தற்போது, சில விற்பனையாளர்கள் 1 கிலோ உப்பு பக்கெட்டை ரூ.450 முதல் ரூ.500 வரை விற்பனை செய்கின்றனர்.
தட்டுப்பாடு தொடர்ந்தால், ஒரு பக்கெட் உப்பு விலை 800ஐ தாண்டும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

