எம்.பி ஆதம்பாவாவினால் கல்முனைக்குடி மண்ணில் தொடரும் மக்கள் பணி

கல்முனைத் தொகுதியின், குறிப்பாக கல்முனைக்குடி பிரதேச மக்களின் நீண்டகாலத் தேவைகளை இனங்கண்டு, கடந்த ஒன்றரை வருட குறுகிய காலப்பகுதியில் பல மில்லியன் ரூபாய் செலவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அபிவிருத்திப்பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதென பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

மக்களின் சுகாதாரம், கல்வி, உட்கட்டமைப்பு, வாழ்வாதாரம் மற்றும் விளையாட்டுத்துறை என அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கிய திட்டங்களின் தொகுப்பு தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 

கல்முனையின்

சுகாதாரத்துறைப் புரட்சி

 

அரச மருந்தக கூட்டுத்தாபன கிளை; கல்முனை பிரதேச மக்களின் மிக முக்கிய தேவையாகக் காணப்பட்ட அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் புதிய கிளை கொண்டுவரப்பட்டுள்ளது.

 

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை; கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 1120மில்லியன் நிதிப் பங்களிப்பு, பாராளுமன்ற உறுப்பினரின் தீவிர முயற்சியால் மீண்டும் வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

 

முன்னோடி வீதிப் புனரமைப்புகள் மற்றும் வடிகான் அமைப்புகள்

 

சாஹிராக் கல்லூரி வீதி,

34 மில்லியன் ரூபாய் பெரும் செலவில் நிலக்கீழ் வடிகான் அமைக்கப்பட்டு, காபட் இட்டு முழுமையாகப் புனரமைக்கப்பட்டுள்ளது.

 

பள்ளி வீதி

9.5 மில்லியன் ரூபாய் செலவில் காபட் இடப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளது.

 

ஆர்.கே.எம். வீதி மக்களின் போக்குவரத்து வசதிக்காகக் காபட் இடப்பட்டு நவீனமயமாக்கப்பட்டுள்ளது.

 

யாசீன் ஜி.எஸ். வீதி

2 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்புப் பணிகள் செய்யப்பட்டுள்ளன.

 

வீட்டுத்திட்டம் மற்றும் வாழ்வாதார உதவி

 

ஒரு கிராம சேவகர் பிரிவுக்கு ஒரு வீடு; தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான 20 புதிய வீடுகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

 

பகுதியளவு சேதமடைந்த வீடுகளைப் புனரமைப்பதற்காக

1.85 மில்லியன் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

 

கட்டார் சேரிட்டி இல்லம்

 

4 மில்லியன் ரூபாய் செலவில் வீட்டுத்திட்டப் பணிகள்

 

இஸ்லாமாபாத் சுனாமி வீட்டுத்திட்டம்; நீண்டகாலப் பிரச்சினையாக இருந்த கழிவு முகாமைத்துவப் பிரச்சினைக்கு முறையான தீர்வு காணப்பட்டுள்ளது.

 

இயற்கைப் பேரிடர் தடுப்பு

 

கடலரிப்புக் கட்டுப்பாடு கடற்கரைப்பள்ளி மற்றும் தர்கா பள்ளிவாயலுக்கு முன்னால் ஏற்பட்ட பாரிய கடலரிப்பைத் தடுப்பதற்காக 20 மில்லியன் ரூபாய் செலவில் அவசர மற்றும் நிரந்தர ஏற்பாடுகள் செய்யப்படுகின்றது.

 

பிரஜா சக்தி மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடுகள்

 

பிரஜா சக்தி திட்டம் (18 மில்லியன் ரூபாய்); இதன் கீழ் சந்தைக் கட்டிட மீள்நிர்மாணம், சமூக மண்டபம் மற்றும் மினி கார்மெண்ட் திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

 

பன்முகப்படுத்தப்பட்ட நிதி; 3.2 மில்லியன் ரூபாய் செலவில் பல்வேறு மக்கள் நலன்சார் அபிவிருத்தித் திட்டங்கள்

 

விளையாட்டுத்துறை மேம்பாடு

 

சந்தாங்கேணி உள்ளக விளையாட்டு அரங்கம்; விளையாட்டு வீரர்களின் நலன் கருதி 104 மில்லியன் ரூபாய் செலவில் மீள்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.

 

சந்தாங்கேணி நீச்சல் தடாகம்; சுமுகமான செயற்பாட்டிற்காக 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான மின்சார இணைப்பு வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

 

“மக்களுக்கான பணி, என்றும் மகத்தான பணி!”

 

மக்களின் தேவைகளை உணர்ந்து, கல்முனை மண்ணை நோக்கிப் பல நூறு மில்லியன் கணக்கான அபிவிருத்தி நிதிகளைக் கொண்டுவந்து சேர்த்து, தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம் என பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *