கடமை நிறைவேற்று அதிபர் சங்கத்தின் தலைவர் உட்பட நிருவாக உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண பாடசாலைகளில் கடமை நிறைவேற்று அதிபர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் விடயமாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவை ஆளுநர் காரியாலயத்தில் உத்தியோகப்பூர்வமாக சந்தித்து கலந்துரையாடினார்.
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக கஷ்ட, அதிகஷ்ட பாடசாலைகளில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இன்று வரை சுமார் 15 வருடங்கள் முதல் 18 வருடங்கள் வரை சிறந்த முறையில் கடமை நிறைவேற்று அதிபர்கள் கடமையாற்றி வருகின்றனர்.
குறிப்பாக நிரந்தர அதிபர்கள் இல்லாத காலத்தில் அத்துடன் நிரந்தர அதிபர்கள் சிலர் இருந்தும் தூரப் பாடசாலைக்கு போவதற்கு அச்சமடைந்த காலங்களில் கடமை நிறைவேற்று அதிபராக இவர்கள் நியமிக்கப்பட்டனர். யுத்த காலம், அனர்த்த காலங்கள், கொரோனா நேரம் உட்பட இன்று வரை இவர்கள் அர்ப்பணிப்புகளுடன் மாணவர்களின் கல்வி அடைவு, பாடசாலைகளின் பௌதிக வளஅபிவிருத்தி என பல்வேறு பட்ட சேவைகளில் முழு மூச்சாக செயற்பட்டு வருகின்றனர்.
கடமை நிறைவேற்று அதிபர்கள் கிழக்கு மாகாணத்தில் தற்போது எதிர் நோக்கி உள்ள பல்வேறு வகையான பிரச்சினைகளை கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கத்தின் தலைவர் உட்பட நிருவாக உறுப்பினர்கள் முன்வைத்து இது தொடர்பாக இவர்கள் தங்களது பிரச்சினைகள் விடயமாக மகஜரினை கிழக்கு மாகாண ஆளுநரிடம் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இது விடயமாக கிழக்கு மாகாண ஆளுநர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு இவ்விடயங்களை முன்கொண்டு முடியுமான வரை நடவடிக்கை மேற்கொள்வதாக ஆளுநர் தெரிவித்ததாக கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கத்தின் தலைவர் இதன் போது தெரிவித்தார்.

