இந் நிகழ்வின் பால்நிலை சமத்துவ ஆலோசகர் வி.வீரசிங்கமால் வளவான்மை மேற்கொண்டார்.
இக்கலந்துரையாடலில் பாலின அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்துதல், நிறுவனங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், வழக்கு பராமரிப்பு நடைமுறைகளில் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி பாதுகாப்பு, உளவியல் ஆலோசனை, சட்ட உதவி மற்றும் சமூக ஆதரவு சேவைகளை திறம்பட வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர்கள், பெண்கள் அபிவிருத்தி மையத்தின் திட்ட முகாமையாளர் ஐயவீர அஞ்சலி, செயற்திட்ட அதிகாரி தேவிக்கா நாகவத்த, பெண்கள் அபிவிருத்தி மையத்தின் இணைப்பாளர் ஜே.எஸ் ரட்ணேஸ்வரி, பெண்கள், சிறுவர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பொலிஸார், துறைசார் நிபுணர்கள் மாவட்ட பெண்கள் அதிகார சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
பாலின அடிப்படையிலான வன்முறையைத் தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியும் பாதுகாப்பும் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கும் இவ்வாறான ஒருங்கிணைந்த செயற்பாடுகள் முக்கிய பங்காற்றுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

