மட்டக்களப்பு கதிரவெளி விக்னேஷ்வரா வித்தியாலய அதிபர் பொன்.இராமச்சந்திரன் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளினால் பகலவன் பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டு மாணவர்களின் ஃபண்ட் வாத்திய இசையுடன் அதிதிகள் அழைத்து வரப்பட்டனர்.
பின்னர் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசியக்கீதம் இசைக்கப்பட்டு மங்கள விளக்கேற்றல் நிகழ்வுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
நிகழ்வில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் பாராட்டி நினைவு சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அறநெறி மற்றும் முன் பள்ளி ஆசிரியர்களும் இதேபோல் கௌரவிக்கப்பட்டனர்.
பிரதம விருந்தினர்களாக கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபை தவிசாளர் க.தெய்வேந்திரன், கோறளைப்பற்று வடக்கு கோட்டக்கல்விப்பணிப்பாளர் நேசகஜேந்திரன், கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் கா.அமலினி ஆகியோர்களுடன் சிறப்பு விருந்தினர்களாக தேச கீர்த்தி கலாநிதி சிவ ஸ்ரீ வேலு சுரேஷ் வர சர்மா, பேராசிரியர் சு.சிவரெத்தினம், அரும்பு இலண்டன் முன்பள்ளி கல்வி அபிவிருத்தி அமைப்பு தலைவர் ந.சச்சிதானந்தம், விசுவமடு சிகரம் இலவச கல்வி நிலைய பணிப்பாளர் திருமதி கு.செல்வகலா, ஆசிரியை திருமதி த.விஜயலட்சுமி, சைவப்புலவர் பா.சுதாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த பிரதேசத்தில் நீண்ட காலமாக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு இவ்வாறானதொரு கல்வி நிலையம் இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறா






