கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வு

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையினால் மேற்கொள்ளப் பட்டு வந்த”சுத்தமான கடற்கரை கவர்ந்திழுக்கும் சுற்றுலாப் பயண முடிவிடம்” என்ற தலைப்பிலான கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வு நேற்று (04) காலை மாங்கேணி மற்றும் காயங்கேணி கடற்கரை சுத்தப்படுத்தலுடன் முடிவுற்றது.

கோறைளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் தவிசாளர் க.தெய்வேந்திரன் தலைமையில் இவ் நிகழ்ச்சித் திட்டம் கடந்த 02.06.2026 முதல் 04.06.2026 வரை தொடர்ந்து 03 நாட்கள் காலை 7.30 மணி முதல் காலை 10.30 மணி வரை நடைபெற்றது.

வாகரை பிரதேசத்தின் கதிரவெளி, கண்டலடி, பனிச்சங்கேணி, மாங்கேணி, காயங்கேணி ஆகிய கடற்கரைகளில் காணப்படும் திண்மக் கழிவுப் பொருட்கள் அகற்றப்பட்டன.

இவ் சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் பொது மக்கள் மற்றும் இராணுவத்தினரும் ஈடுபட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *