வாழைச்சேனையில் 31 வயது இளைஞன் போதைப்பொருளுடன் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்ட நாசிவந்தீவு பிரதேசத்தில் வைத்து நேற்று (6) பிற்பகல் 1.20 மணியளவில் ஓட்டமாவடி, சந்தை வீதியை வசிப்பிடமாகக்கொண்ட 31 வயதுடைய இளைஞர் ஐஸ் போதைப்பொருளுடன் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

வாழைச்சேனை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்புப்பிரிவின் பொறுப்பதிகாரி திரு எஸ்.ஐ.அசங்கவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவலுக்கமைய அவரது தலைமையில் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கே.எஸ்.பி.சஞ்சீவ அவர்களின் வழிகாட்டலில் திரு.அக்ரம் (92658), திரு.ராஜபக்ச (98838), விஷேட பிரிவைச்சேர்ந்த முஹம்மது பயாஸ் ஆகியோர் குறித்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

 

கைது செய்யப்பட்ட இளைஞனிடமிருந்து 1,490 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிள், கையடக்கத்தொலைபேசி என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

மேலதிக நடவடிக்கைகளையும் விசாரணைகளையும் வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் மோட்டார் சைக்கிள், கைத்தொலைபேசி என்பவற்றுடன் குறித்த இளைஞனை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக வாழைச்சேனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *