அட்டாளைச்சேனையில் நெல் களஞ்சியசாலைகளைத் திறக்க விவசாயிகள் கோரிக்கை

அட்டாளைச்சேனை கம நல சேவை நிலையத்திற்குட்பட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் சம்மந்தமாக கலந்துரையாடப்பட்டன.

 

இதன் போது தற்போதைய சிறு போகத்தில் விவசாயிகள் உரம் உட்பட களைநாசினிகளை அதிக விலைக்கு கொள்வனவு செய்து வந்துள்ளனர்.

 

தற்போது அறுவடை செய்யப்படும் நெல் மூடைகளுக்கு விலை மிகவும் குறைவாக உள்ளது.

 

இருப்பினும் கடந்த பெரும் போகத்தில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு செந்தமான களஞ்சியம் மூலம் நெல் கொள்வனவு இடம்பெறவில்லை. இங்கு பழைய நெல் மூட்டைகள் தேங்கி உள்ளன.

 

இதனால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். எனவே இம்முறை நோரகாலத்தோடு நெல் கொள்வனவு இடம்பெற வேண்டும் என விவசாய சங்கங்களின் பதவி வழி உத்தியோகத்தர்கள் கோரிக்கைகளை முன்வைத்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *