அம்பாறை மாவட்டம் காரைதீவு விபுலானந்தா கலாசார மண்டபத்தில், புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களுக்காக பரிந்துரை மற்றும் ஆலோசனை தொடர்பான பயிற்சி அம்பாறை மாவட்ட பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் யுஎன்டிபி மற்றும் எஸ்எப்சிஜி ஆகிய நிறுவனங்களின் நிதி அனுசரனையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வளவாளராக திரு. ஜெயபாலன் கலந்து கொண்டார்.
குறித்த நிகழ்வில் பரிந்துரை மற்றும் ஆலோசனை தொடர்பான பயிற்சிகளும் விளக்கங்கள் என்பன வளவாளரினால் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

