புகையிலை உற்பத்திப் பொருட்கள் அற்ற பிரதேசம் மற்றும் போதைப்பொருள் பாவனை அற்ற சமூகத்தை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று(08) பலாச்சோலை கிராமத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பலாச்சோலை விபுலானந்தா வித்தியாலய மாணவர்கள், பாடசாலை உத்தியோகத்தர்கள், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் செங்கலடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து கலந்து கொண்டனர்.

