மட்டக்களப்பில் இன மத பேதமின்றி அனைவரின் பங்கேற்புடன் வெசாக் தினம் அனுஸ்டிப்பு

தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள மங்கலராமய விகாரையில் இன மத பேதமின்றி அனைவரின் பங்கேற்புடன் வெசாக் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் வர்ணஜயசுந்தர தலைமையில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதன்போது மாவட்ட தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக  உள்ள வெசாக் அலங்கார தோரணம் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மற்றும் அதிதிகளினால் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் ஸ்ரீ முரசொளிமாறன் குருக்கள், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன், மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாவட்டத்தில் பல பகுதிகளிலும் இருந்து அலங்கார வெசாக்கூடுகளை பார்வையிடுவதற்கு பெரும்திரளான மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதன் போதுபொது மக்களுக்கு பல இடங்களில் தன்சல் வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *