நாவலப்பிட்டி மாணவர்களுக்கு கால்பந்து வாய்ப்பு!

நாவலப்பிட்டி பகுதியில் ஒரு வருடத்திற்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டு வரும் கால்பந்து பயிற்சி திட்டத்தில் தற்போது 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இணைந்துள்ளனர்.

கிரீன்வுட் மற்றும் வெஸ்டோல் பாடசாலைகளிலிருந்து வருகை தந்துள்ள மாணவர்களுக்கு, இலங்கை தேசிய கால்பந்து அணியில் விளையாடும் ஷானு பாஸ்கரன் மற்றும் இலங்கை தேசிய  அணியின் நைஜீரிய பயிற்சியாளர் DJ ஆகியோர் இலவசமாக மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி வருகின்றனர்.

மாணவர்களுக்கு தேவையான டி-ஷர்ட், பைகள், கால்பந்துகள் மற்றும் பயிற்சி உபகரணங்கள் FC முத்தையா அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டுள்ளன.

பயிற்சியின் பின்னர் திறமையான வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் பாடசாலை அணிகளுடன் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளன. எதிர்காலத்தில் தேசிய அணிக்கும் தெரிவாகும் வாய்ப்பை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த முயற்சிக்கு பாடசாலை அதிபர்கள், முன்னாள் அதிபர்கள் மற்றும் பலர் வழங்கி வரும் ஒத்துழைப்புக்கு  அறக்கட்டளையின் நிருவனர் முத்தையா சௌந்தர்ராஜன்  நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *