ருமேஷ் தரங்கவின் ஈட்டிகளுக்கு ஏற்பட்ட சேதம்

இலங்கையின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்க, இன்று (15) அதிகாலை நாட்டை வந்தடைந்த நிலையில், அவர் பயன்படுத்திய 5 ஈட்டிகளும் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டபோது சந்தேகத்திற்கிடமான வகையில் உடைந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹங்கேரியின் புடாபெஸ்டில் 91.09 மீற்றர் தூரம் எறிந்து உலக சாதனை படைத்த ஈட்டி மற்றும் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் 92.07 மீற்றர் தூரம் எறிந்த ஈட்டி உள்ளிட்ட அவர் பயன்படுத்திய 5 ஈட்டிகளுமே சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அல்டிமேட் மற்றும் டைமண்ட் லீக் ஆகிய இரண்டு சம்பியன்ஷிப் பட்டங்களையும் வென்ற ருமேஷ் தரங்க, இன்று அதிகாலை 5.10 மணியளவில் துருக்கிய ஏர்லைன்ஸின் TK-730 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

விமானப் பயணத்தின்போது தனது முக்கியமான போட்டி உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளமை தொடர்பில் அவர் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *