செளத்தம்டனில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி 119 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 254 ஓட்டங்களை பெற்றது.
இங்கிலாந்து அணியின் தலைவர் ஹெரி புரூக் ஆட்டமிழக்காமல் 114 ஓட்டங்களை பெற்றதுடன், ஜோஸ் பட்லர் 80 ஓட்டங்களை குவித்தார்.
255 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்த இலங்கை அணி 19 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 135 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை தரப்பில் துனித் வெல்லாலகே அதிகபட்சமாக 33 ஓட்டங்களை பெற்றார்.
இங்கிலாந்து தரப்பில் சோனி பேக்கர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 1–0 என முன்னிலை பெற்றுள்ளது.

