2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி இன்று(28) மாலை நடைபெறவுள்ளது.
இந்த போட்டி ஜப்பானின் நகோயா Mizuho Park அரங்கில் நடைபெறவுள்ளது.
இந்தத் தொடர், தகுதிச் சுற்று இல்லாமல் நேரடியாக இறுதிப் போட்டியாக (Direct Final) 14 வீரர்கள் பங்கேற்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்றையதினம் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் 9 நாடுகளைச் சேர்ந்த 14 வீரர்கள் நேரடியாகப் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், இலங்கை அணியின் தலைவராகக் களம் இறங்கும் வீரர் ருமேஷ் தரங்க பதிரகே, கடந்த ஜூன் மாதம் ரோமில் ஈட்டி எறிதல் போட்டியில் 92.62 மீட்டர் ஈட்டி எறிந்து படைத்த உலக சாதனையின் அடிப்படையில் இன்றைய போட்டியில் தங்கம் வெல்லும் பிரதான போட்டியாளராகக் கருதப்படுகிறார்.
பாகிஸ்தானின் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஷத் நதீம் மற்றும் இந்தியாவின் ரோஹித் யாதவ் ஆகியோருடன் ருமேஷ் மோதும் இந்தப் போட்டி, உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

