கிளிநொச்சி அக்கராயன் குளத்திற்கு அண்மித்த காட்டுப்பகுதியில் காட்டு யானை ஒன்று உயிரிழந்த நிலையில் காணப்படுகின்றது. குறித்த யானை குறித்த பகுதியில் நோய்வாய்ப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு உயிரிழந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.யானையின் இறப்பு தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினர் வடமாகாண வனஜீவராசிகள் திணைக்கள கால்நடை வைத்தியருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
2026-09-29

