கிளிநொச்சி மாவட்டத்தின் கல்மடுக்குளத்தின் கீழான 2026/2027 காலபோக நெற்ச்செய்கை தொடர்பான கலந்துரையாடல் கண்டாவளை பிரதேச செயலாளர் தங்கவேலாயுதம் பிருந்தாகரன் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று 29.09.2026நடைபெற்றது. எல்நினோ நிலைமை எதிர்வு கூறப்பட்ட நிலையில் காலபோக நெற்ச்செய்கையை வெற்றிகரமாக மேற்கொள்வது,சேற்றடித்தல் இல்லாது விதைப்பை மேற்கொள்ளும் போது களை நெல் தாக்கம் அதிகரிக்கும் நிலையில் களைநெல்லை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. ,கிளிநொச்சி பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர் கே.பிரகாஷ், கிளிநொச்சி கிழக்கு நீர்ப்பாசன பிரிவு பொறியியலாளர் கே.சுஜீவன், ப நெல்ஆராய்சி நிலையம், கமநல காப்புறுதிச்சபை உள்ளிட்ட விவசாயத்துறை சார்ந்த மாவட்ட உத்தியோகத்தர்கள் .கல்மடுக்குளத்தின் கீழான கமக்காரர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
2026-09-29

