வடக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்கள கிளிநொச்சி மாவட்ட சமூக சேவை அலுவலகத்தின் ஏற்பாட்டில் 2026ம் ஆண்டுக்கான
முதியோர் மற்றும் மாற்று வலுவுடையோர் தின நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
“முதியோர் முன்னெடுக்கும் மாற்றம் – எமது எதிர்பார்ப்புகள் நல்வாழ்வு மற்றும் உரிமைகள்”
“உள்ளடக்கிய மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக மாற்றுத்திறனாளிகளின் தலைமைத்துவத்தை மேம்படுத்தல்”என்ற இரு தொனிப்பொருளில் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் பரராஜசிங்கம் ஸர்மிலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்
பிரதம விருந்தினராக வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள,
பணிப்பாளர் தனுஷா லுக்சாந்தன் கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தொற்றா நோய் வைத்தியர் S.G. பெர்னார்ட்ஷா, அக்கராயன் குளம் பிரதேச வைத்திய அதிகாரி வைத்தியர் Y. பவித்ரா,கைதடி முதியோர் இல்ல மேற்பார்வையாளர்,என்.ராஜமனோகரன் உள்ளிட்டோர் ..கலந்து கொண்டனர்.முதியோர் மற்றும் மாற்றுவலுவுள்ளோரின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன..விளையாட்டுப்போட்டி களும் இடம்பெற்றன.

